துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் விடுதலைக்கு எதிரான மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் சவாலை முறியடிக்க சட்டத்துறை தலைவர் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
யாயாசான் அகல்புடி ஊழல் வழக்கில் இருந்து ஜாஹித் ஹமிடி தற்காலிக விடுதலை பெற்றதை எதிர்த்து வழக்கறிஞர் மன்றம் வழக்குத் தொடரலாம் என்ற மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தலைகீழாக சட்டத்துறை தலைவர் துசுகி மொக்தார் தற்போது கூட்டரசு நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கைத் திரும்பப் பெறும் சட்டத்துறை தலைவரின் முடிவை நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்பது உள்ளிட்ட இரு முக்கியச் சட்டக் கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார்.
வழக்கறிஞர் மன்றத்தின் சவாலை உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரிக்கலாம் என அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அதற்குத் தடை விதிக்கக் கோரி ஜாஹித் ஹமிடி தரப்பும் தனியாக மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.








