Jun 5, 2026
Thisaigal NewsYouTube
தொகுதி நிதி மக்களின் உரிமை; அரசியல் ஆயுதம் அல்ல:  வீ.கணபதிராவ் முழக்கம்
தற்போதைய செய்திகள்

தொகுதி நிதி மக்களின் உரிமை; அரசியல் ஆயுதம் அல்ல: வீ.கணபதிராவ் முழக்கம்

Share:

நாடாளுமன்றத் தொகுதி நிதி என்பது மக்களின் வரிப்பணம் என்பதால், அரசியல் பாகுபாடின்றி அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அது சமமாகப் பங்கீடப்பட வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தியுள்ளார்.

ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என எந்தவொரு தரப்பாக இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு நிதி மறுக்கப்படும்போது தொகுதி மக்களே நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தொகுதி நிதி ஒதுக்கீடு என்பது அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற வேண்டும் என்றும், மக்கள் தொகை மற்றும் உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் நிதியைத் வெளிப்படைத்தன்மையுடன் பகிர்ந்தளிக்க ஒரு சுதந்திரமான கட்டமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கணபதிராவ் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Related News