கோலாலம்பூர், ஜூலை.29-
தாய்லாந்தும், கம்போடியாவும் உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்ததிற்கு உடன்பாடு கண்டதைத் தொடர்ந்து அது தொடர்பான பேச்சுவார்த்தை வழிமுறையை எளிமைப்படுத்துவதற்கு அவ்விரு நாடுகளுக்கும் செல்லவிருக்கும் தூதுக் குழுவினருக்கு மலேசிய ஆயுதப்படை தளபதி ஜெனரல் முகமட் நிஸாம் ஜாஃபார் தலைமையேற்கவிருக்கிறார்.
தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று புத்ராஜெயாவில் பிரதமரும், ஆசியான் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இரு நாடுகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்டப் பேச்சு வார்த்தையில் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் காணப்பட்டன.
அந்த இணக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் அடுத்தக் கட்டப் பேச்சு வார்த்தையை எளிதாக்குவதற்கு அவ்விரு நாடுகளுக்கும் செல்லவிருக்கும் தூதுக் குழுவினருக்கு ஜெனரல் முகமட் நிஸாம் தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








