கோலாலம்பூர், ஜூலை.13-
மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தனது 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு புத்ராஜெயாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஏற்பட்ட சோர்வு காரணமாக தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய சிகிச்சையும் ஓய்வும் நிறைவடைந்தும், இன்று மாலை 4:45 மணியளவில் துன் மகாதீர் வீடு திரும்பினார். இந்த வாரம் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய துன் மகாதீர், பெர்டானா லீடர்ஷிப் ஃபௌண்டேஷன் அறக்கட்டளையில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாகப் பங்கேற்றார்.
எனினும், நிகழ்வின் நடுவே அசௌகரியமாக உணர்ந்த அவர், திட்டமிடப்பட்ட கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே தனது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியுடன் அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் அவர் ஓய்வெடுப்பதற்காக ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டார். துன் மகாதீர் நலமாக இருப்பதாகவும், அவருக்கு ஓய்வு தேவை என்றும் அவரது உதவியாளர் சுஃபி யுசோஃப் உறுதிப்படுத்தினார்.








