Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவில் குடிநுழைவுத்  துறை அதிரடி சோதனை: 81 சட்டவிரோதக் குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை: 81 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

Share:

ஜோகூர் பாரு.ம் மார்ச்.07-

ஜோகூர் பாரு, பாண்டான் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் இன்று காலை 10 மணியளவில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 81 வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான AKPS ஒத்துழைப்புடன் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் டத்தோ முஹமட் ருஸ்டி முஹமட் டாருஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சட்டவிரோதக் குடியேறிகளைப் பணியமர்த்தியதாகச் சந்தேகிக்கப்படும் இடங்கள் குறி வைக்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் 46 பேர் வங்கதேசத்தினர், 22 பேர் மியன்மார் நாட்டினர், 10 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியா, நேபாளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். முறையான ஆவணங்கள் இன்றி இவர்கள் மளிகைக் கடைகளில் காய்கறி மற்றும் இறைச்சி விற்பனையாளர்களாகவும், உணவு விடுதிகளிலும் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக Setia Tropika குடிநுழைவு தடுப்பு முகாமிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர் என்று முஹமட் ருஸ்டி குறிப்பிட்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு