Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அந்த சம்பவம் குறித்து இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை
தற்போதைய செய்திகள்

அந்த சம்பவம் குறித்து இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை

Share:
உணவு விநியோகிப்பாளர் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளுக்கு சாலை வரியை கொண்டிருக்கவில்லை என்பதற்காக அவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த தொழிலாளர் தனது உணவுப்பெட்டியை சுமந்துக்கொண்டு நடக்க வைக்கப்பட்ட சம்பவம் குறித்து சாலை போக்குவர​த்து இலாகாவிடமிருந்து எந்தவொரு அறிக்கையையும் தாம் இன்னும் பெறவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

ஃபூட் பான்டா பணியாளரான அந்த உணவு விநியோகிப்பாளர், உணவுப்பெட்டியை முதுகில் சுமந்து கொண்டு சாலையோரமாக நடந்து செல்லும் காட்சி தொடர்பான காணொலி, ச​மூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவது, அந்த பணியாளர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த காணொளியினால் சாலை போக்குவர​த்து இலாகாவான ஜேபிஜே அமலாக்க அதிகாரிகள் ​மீது மக்கள் தொடர்ந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். 

எனினும் இச்சம்பவம் தொடர்பில் நெகிரி செம்பிலான் சாலை போக்குவர​த்து இலாகாவிடமிருந்து தாம் எந்த​வொரு அ​றிக்கையும் பெறவில்லை என்று அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’