Oct 18, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் யுஎஸ்எம் துணைவேந்தர் ஸுல்கிஃப்லி கொள்ளையர்களால் தாக்கப்பட்டார்!
தற்போதைய செய்திகள்

முன்னாள் யுஎஸ்எம் துணைவேந்தர் ஸுல்கிஃப்லி கொள்ளையர்களால் தாக்கப்பட்டார்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

முன்னாள் மலேசிய அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸுல்கிஃப்லி அப்துல் ரஸாக், நேற்று அதிகாலை தாமான் பெகாகா பகுதியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார்.

பினாங்கு மாநில போலீஸ் தலைவர் அஸிஸீ இஸ்மாயில் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியிருப்பதோடு, சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியின் கைப்பகுதியால் தாக்கப்பட்டதால் ஸுல்கிஃப்லியின் தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் அஸிஸீ குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், ஸுல்கிஃப்லியின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Related News