Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பண மோசடியில் மூதாட்டி வெ.6 லட்சம் இழப்பு
தற்போதைய செய்திகள்

பண மோசடியில் மூதாட்டி வெ.6 லட்சம் இழப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன் 19-

தொலைப்பேசி மோசடியில் மூதாட்டி ஒருவர் 6 லட்சம் வெள்ளியை இழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று பாதிக்கப்பட்ட 70 வயதுடைய அம்மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம் குமார் தெரிவித்தார்.

கடந்த மே மாத தொடக்கத்தில், தம்மை தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தின் (NSRC) அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் அதில் பாதிக்கப்பட்டவர் மீது மோசடி தொடர்பான குற்றப்பதிவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், விசாரணையின் நோக்கத்திற்காக பாதிக்கப்பட்டவரின் வங்கியிலிருக்கும் மொத்த தொகையையும் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ய அந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கட்டளைக்கு இணங்க பணம் பறிமாற்றம் செய்ததாகவும் பின் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் எம் குமார் அறிவித்தார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது