Dec 17, 2025
Thisaigal NewsYouTube
ஆல்பெர்ட் தே விவகாரத்தில் சிலாங்கூர் போலீசின் அறிக்கை முன்கூட்டியே அவசரமானது - வழக்கறிஞர் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆல்பெர்ட் தே விவகாரத்தில் சிலாங்கூர் போலீசின் அறிக்கை முன்கூட்டியே அவசரமானது - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.17-

எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் வர்த்தகர் ஆல்பெர்ட் தே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் ஆதாரங்கள் இல்லை என்று சிலாங்கூர் போலீஸ் கூறுவது அவசரமான முன்கூட்டியே அறிவிப்பு என ஆல்பெர்ட் தே-இன் வழக்கறிஞர் மஹஜோத் சிங் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது அங்கிருந்த சாட்சியங்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்கள் பதிவு செய்வதற்கு முன்பாகவே சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸ்ர்லி கஹார் அவ்வாறு அறிக்கை விடுத்துள்ளதாகவும் மஹஜோத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆல்பெர்ட் தே-இன் மனைவி, மனைவியின் தாயார் மற்றும் வீட்டு உதவியாளர் ஆகிய மூவரிடமிருந்து மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மஹஜோத் சிங், அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்படுவதற்கு முன் எந்த முடிவையும் அறிவிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரத்தில், கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி ஷாஸெலி கஹார் வெளியிட்ட அறிக்கையில், எஸ்பிஆர்எம் அதிகாரி ஒருவர் ஆல்பெர்ட் தே-ஐ துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News