செமினி, ஆகஸ்ட்.29-
ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் ( Palapes) பயிற்சியாளர் ஷாம்சுல் ஹாரிஸ் ஷம்சுடின் உடல் இன்று காலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
போலீஸ் படையின் தீவிர கண்காணிப்புடன் சிலாங்கூர், செமினி, கம்போங் ரிஞ்சிங் உலு, முஸ்லிம் மையத்துக் கொல்லையிலிருந்து அந்த மாணவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தோண்டல் பணி காலை 9.22 மணிக்கு நிறைவு பெற்றது.
அந்த மாணவனின் உடலில் இரண்டாவது சவப் பரிசோதனை நடத்துவதற்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மாணவனின் உடலைத் தோண்டும் பணியை அரச மலேசிய போலீஸ் படை மேற்கொண்டது. காலை 9.36 மணிக்கு அந்த மாணவனின் உடல், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்து.
தங்கள் மகன் துன்புறுத்தலுக்கு ஆளாகி மரணமடைந்து இருக்கக்கூடும் என்று அந்த மாணவரின் 45 வயது தாயார் உம்மு ஹைமான் பீ டௌலாட்கன் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.








