பினாங்கு இரண்டாவது பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியில் உண்மையில்லை என்று அந்த பாலத்தை நிர்வகித்து வரும் Jambatan Kedua Sdn. Bhd. தெரிவித்துள்ளது.
சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா என்ற அந்த இரண்டாவது பாலத்தில் பயங்கர விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அது எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி தொடர்பில் அந்த நிறுவனம் போலீசில் புகார்செய்துள்ளது.
பொது மக்களுக்கு குறிப்பாக வாகனமோட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் 28 விநாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று ஜம்பாத்தான் கெடுவா எஸ்டிஎன். பிஎச்டி. நிறுவனம், பத்து காவான் போலீஸ் புகார் நிலையத்தில் புகார் செய்து இருப்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








