ஈப்போ, செப்டம்பர்.01-
பேரா மாநில அளவில் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை அணுகிய பெண், சீன இனத்தவர் என்று தவறுதலாகச் செய்தியை பகிர்ந்து கொண்டதற்காக பாஸ் கட்சியை சேர்ந்த மஞ்சோய் சட்டமன்ற உறுப்பினர் ஹாஃபிஸ் சப்ரி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
சம்பவ இடத்தில் தாம் இருந்ததாகவும், தமக்குக் கிடைத்தத் தொடக்கத் தகவலை அடிப்படையாகக் கொண்டே அந்தப் பெண் சீனர் என்று தகவலைப் பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் அந்தத் தகவல் தவறு என்று அறிந்த பின்னர் தாம் பதிவேற்றம் செய்த செய்தியில் மன்னிப்பு கேட்டு, திருத்தம் செய்ததாக ஹாஃபிஸ் தெரிவித்தார்.
எனினும் தாம் முதலில் அனுப்பிய தவறானச் செய்தியை சில தரப்பினர் வேண்டுமென்றே பகிர்ந்து, தவறாக வியாக்கியானம் செய்து வருவது குறித்து தாம் போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








