ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.03-
ஜோகூரில் வியட்நாம் பெண் தலைமையில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிரடியாகப் பிடிபட்டது. இரண்டு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கடந்த வாரம் நடந்த வெவ்வேறு சோதனைகளில், 4.9 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் முதல் செயல்பட்டு வந்த இந்தச் கும்பல், போதைப்பொருட்களைப் பொடியாக மாற்றி சிறிய பொட்டலங்களாக உள்நாட்டில் விநியோகம் செய்து வந்துள்ளது. கைது செய்யப்பட்ட வியட்நாம் பெண், கெட்டமைன் போதைப்பொருளை உட்கொண்டிருப்பது சோதனையில் தெரிய வந்த நிலையில், இக்கும்பலைச் சேர்ந்த மேலும் பலரைத் தேடி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.








