Oct 16, 2026
Thisaigal NewsYouTube

லிட்டில் டாக்கா பகுதிகளில் 58 அந்நியர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லிட்டில் டாக்கா பகுதிகளில் 58 அந்நியர்கள் கைது

ஜோகூர்பாரு, டிச. 7-


ஜோகூரில் லிட்டில் டாக்கா என்ற வர்ணிக்கப்படும் வங்காளதேசிகளின் ஆக்ரமிப்புப்புக்கு உரிய வர்த்தகப்பகுதியில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 58 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பத்து பகாட் மற்றும் சிகாமட் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர், ஜோகூர்பாருவில் லிட்டில் டாக்கா என்று வர்ணிக்கப்படும் தாமான் தம்போய் பகுதியில் கைது செய்யப்பட்டனர் என்று ஜோகூர் மாநில குடிநுழைவு இயக்குநர் ருஸ்டி டாருஸ் தெரிவித்தார்.

பிடிபட்டவர்களிடம் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →