Sep 7, 2026
Thisaigal NewsYouTube
நெறிமுறைகளை உடைத்து மக்களோடு மக்களாக அலவளாவிய அன்வார் - ஆச்சரியத்தில் திளைத்த பார்வையாளர்கள்
தற்போதைய செய்திகள்

நெறிமுறைகளை உடைத்து மக்களோடு மக்களாக அலவளாவிய அன்வார் - ஆச்சரியத்தில் திளைத்த பார்வையாளர்கள்

Share:

டத்தாரான் புத்ராஜெயாவில் தேசிய தின அணிவகுப்பு நிறைவடைந்த பின்னர், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டிச் சென்று மக்களோடு, மக்களாக அவர்களுடன் கலந்துரையாடியது அங்கிருந்த பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் மேடையில் இருந்து வெளியேறிய அன்வார், முதலில் மனித உருவப் படக்காட்சி நிகழ்த்திய குழுவினரிடம் சென்று, அவர்களின் சிறப்பான நிகழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

இதில் 36 பள்ளிகளைச் சேர்ந்த 1,500 மாணவர்கள் பங்கேற்று, சமகாலப் பிரபல பாடல்கள் முதல் பாரம்பரியப் பாடல்கள் வரை பல்வேறு பாடல்களை இசைத்து அசத்தினர்.

மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்ட அன்வார், பின்னர் சீருடை அணிந்த படையினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களைச் சந்தித்தார்.

தொடர்ந்து பார்வையாளர்கள் திரண்டிருந்த பகுதிக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பள்ளி விடுமுறை மற்றும் ஏற்பாட்டாளர்கள் வழங்கிய போக்குவரத்து வசதிகள் ஆகியவை பெருந்திரளான மக்கள் வருகைக்கு முக்கிய காரணங்களாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து