Sep 27, 2026
Thisaigal NewsYouTube
உலக அரங்கில் உண்மையை உரக்கச் சொல்ல மலேசியா அஞ்சாது: பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

உலக அரங்கில் உண்மையை உரக்கச் சொல்ல மலேசியா அஞ்சாது: பிரதமர் அன்வார்

Share:

பெரிய வல்லரசு நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், சர்வதேச அளவில் உண்மையை உரக்கச் சொல்வதில் மலேசியா தனது சுதந்திரமான மற்றும் இறையாண்மைமிக்க நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று கிளந்தான், சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர், மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்த மலேசியாவின் துணிச்சலான குரலைச் சுட்டிக்காட்டினார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உடனான உரையாடலில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்த மலேசியாவிற்கு ஈரான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

ஈரானில் பள்ளிச் சிறுவர்கள் மற்றும் ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இதேபோன்ற தாக்குதல் மேற்கத்திய நாடுகளில் நடந்திருந்தால் உலகம் முழுவதும் மாதக்கணக்கில் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கும். ஆனால் ஒரு இஸ்லாமிய நாட்டில் குழந்தைகள் கொல்லப்படும்போது பல நாடுகள் மௌனம் காப்பது வேதனையளிக்கிறது," என டத்தோஸ்ரீ அன்வார் சாடினார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்