Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க பெட்ரோனாஸ் பேச்சுவார்த்தை: பிரதமர் அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க பெட்ரோனாஸ் பேச்சுவார்த்தை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

Share:

நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான எண்ணெய் விநியோகத்தைப் பெறுவதற்காக, பெட்ரோனாஸ் நிறுவனம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கிளந்தான், சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்று திறந்து வைத்துப் பேசிய டத்தோஸ்ரீ அன்வார், ரஷ்யாவுடன் மலேசியா நல்லுறவைக் கொண்டிருப்பதால் இந்தப் பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்றார்.

முன்பு ரஷ்யா மீது தடைகளை விதித்த ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளே இப்போது அங்கிருந்து எண்ணெய் வாங்கப் போட்டியிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவின் அரச தந்திர முயற்சிகளால், ஹார்முஸ் நீரிணை வழியாக மலேசிய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடக்க வழிவகை செய்யப்பட்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Related News