Jul 1, 2026
Thisaigal NewsYouTube
போலிச் சம்பளச் சீட்டு கொடுத்து மோசடி: 37 வயது நபருக்கு 9 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

போலிச் சம்பளச் சீட்டு கொடுத்து மோசடி: 37 வயது நபருக்கு 9 மாதச் சிறை

Share:

மின்சாரப் பொருட்களை தவணை முறையில் வாங்குவதற்காகப் போலிச் சம்பளச் சீட்டைப் பயன்படுத்திய 37 வயதுடைய நபர் ஒருவருக்கு சபா, கோத்தா கினபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதித்தது.

நிக்கோலஸ் ஓவின் யோஹானஸ் லாபா என்ற அந்த நபர், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி, மங்காத்தாலில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் தொலைக்காட்சி மற்றும் குளிரூட்டியை வாங்குவதற்காகத் தான் வேலை செய்யாத ஒரு நிறுவனத்தின் பெயரில் போலிச் சம்பளச் சீட்டைச் சமர்ப்பித்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அந்த நிறுவனத்திற்கு நிறுவனத்திற்கு RM6,568 இழப்பு ஏற்பட்டது.

மற்றொரு வழக்கில், திருடப்பட்ட சொத்தை மறைக்க உதவியதற்காக 32 வயதுடைய ஜாஸ்மின் சுவைப் என்பவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி, கம்பங் லிகாஸ் பகுதியில் திருடப்பட்ட புரோட்டான் சாகா காரின் டயர் மற்றும் ரிம் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

Related News