Oct 16, 2026
Thisaigal NewsYouTube

34 மூட நம்பிக்கைக் கோட்பாடுகள் இன்னும் செயல்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
34 மூட நம்பிக்கைக் கோட்பாடுகள் இன்னும் செயல்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது

பகாங், டிச.6-

பகாங் மாநிலத்தில் 34 மூட நம்பிக்கைக் கோட்பாடுகள் இன்னும் செயல்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த மூட நம்பிக்கைக் கோட்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுவதாகவும், அவர்கள் சரியான பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GISBH என்ற அமைப்பு மூட நம்பிக்கைக் கோட்பாடுகளை பரப்பி வருவதாகவும், இந்த அமைப்பு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் கூறப்படுகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள், இறந்து போன ஒருவரை இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர்.

இந்த அமைப்புகள் சட்டவிரோதமானவை என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் சட்டவிரோதமானவை.அதன் உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என இஸ்லாமிய சமய விவகாரம், புறநகர் மேம்பாடு, மாநில பூர்வ குடிமக்கள் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் Datuk Seri Syed Ibrahim Syed Ahmad தெரிவித்தார்.

மக்கள் இது போன்ற மூட நம்பிக்கைக் கோட்பாடுகளை நம்பாமல் இருக்க வேண்டும் எனவும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சந்தேகமான செயல்பாடுக; இருப்பது பொது மக்களுக்குத் தெரிய வந்தால், உடனடியாகக் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →