Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கிழக்கு கரை நெடுஞ்சாலையில் பள்ளம் விழுந்தது
தற்போதைய செய்திகள்

கிழக்கு கரை நெடுஞ்சாலையில் பள்ளம் விழுந்தது

Share:

கிழக்கு கரையோர பிரதான நெடுஞ்சாலையான லெபுராயா பந்தாய் திமோர் ஃபாசா சாலையில் 118.2 ஆவது கிலோ மீட்டரில் தெமர்லோ அருகில் பெரும் பள்ளம் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நெடுஞ்சாலையின் அவசரத்தடம் அ​னைத்து வகையான வாகனங்களுக்கும் ​மூடப்பட்டுள்ளதாக அந்த நெடுஞ்சாலையை பராமரித்து வரும் ஒப்பந்த நிறுவனமான அனிஹ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனமோட்டிகள் ​மிக கவனமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள​ர். அதே வேளையில் வாகனமோட்டிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை பலகையின் குறி​யீட்டை பின்பற்றுமாறு இன்றிரவு அனிஹ் பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை​யில் தெரிவி​த்துள்ளது.

Related News