பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை க்கும் எதிராக சமூக வலைத் தளத்தில் மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
51 வயதுடைய முதல் நபர் சிலாங்கூர், பண்டார் பாரு பாங்கியில் கைது செய்யப்பட்டார். 27 வயதுடைய இரண்டாவது நபர், பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் த லைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
இரு நபர்களும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில் புலன் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் தன்மையில் யாரும் ஆருடம் கூற வேண்டாம் என்று பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.








