Oct 17, 2026
Thisaigal NewsYouTube

குடிநுழைவு அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குடிநுழைவு அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்

ஜொகூர் , அக்டோபர் 07-

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கும், இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் 55 ஆயிரத்து 150 வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவர், ஜோகூர்பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

41 வயது முகமது எடிசாஹ்ரில் முகமது நூர் என்ற குடிநுழைவுத் அதிகாரி, தனது மனைவியின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, ஆடவர் ஒருவரிடமிருந்து மூவாயிரம் வெள்ளி முதல் 10 ஆயிரம் வெள்ளி வரை லஞ்சம் பெற்று வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட காலக்கட்டத்தில் ஜோகூர்பாரு, பந்தர் பாரு உடா- வில் அந்த அதிகாரி இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றதில் கூறப்ட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் SPRM சட்டத்தின் கீழ் அந்த அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →