சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த பட்டப்படிப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கான மாநில அரசின் 200 வெள்ளி பற்றுச்சீட்டு அடுத்த வாரம் வழங்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ செரி அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வழங்கிய ஐந்து வாக்குறுதிகளில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 200 வெள்ளி மதிப்பில் புத்தகங்கள் வாங்குவதற்கான பற்றுச்சீட்டு உதவியும் ஒன்றாகும்.
அதன் அடிப்படையில் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 200 வெள்ளிக்கான புத்தக பற்றுச்சீட்டுகள் அடுத்த வாரம் வழங்கப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.








