Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மாஆல் ஹிஜ்ரா விருதை டத்தோ நூ காடோட் வென்றார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாஆல் ஹிஜ்ரா விருதை டத்தோ நூ காடோட் வென்றார்

கோலாலம்பூர், ஜூன்.27-

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தோக்கோ மாஆல் ஹிஜ்ரா விருதை இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் முஸாகாரா செயற்குழுத் தலைவர் டத்தோ டாக்டர் நூ காடோட் வென்றார்.

இன்று கோலாலம்பூரில் மலேசிய அனைத்துலக வர்த்தகக் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மாஆல் ஹிஜ்ரா கொண்டாட்ட நிகழ்வில் டத்தோ டாக்டர் நூ, அந்த உயர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மாஆல் ஹிஜ்ரா விருதை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அந்த சமய மன்றத் தலைவருக்கு வழங்கி சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சமயத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →