ஈப்போ, ஆகஸ்ட்.08-
கடந்த 2018 ஆம் ஆண்டு வங்காளதேசப் பிரஜை ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று மரணத் தண்டனை விதித்தது.
28 வயது முகமட் அமீர் அம்ஸார் முகமட் அஸ்பார் என்ற அந்த நபர், ஓர் அந்நிய நாட்டவரான 32 வயது முகமட் ஒவாய்துல் என்பவரை மிகக் கோரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி பேரா, கம்போங் காகா, சுங்கை காலா, சுங்கை கிந்தாவில் சம்பந்தப்பட்ட நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








