ரொம்பின், ஜூலை.30-
கார் ஒன்று லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் கார் இழுவைப் பணியாளர் ஒருவர் மரணமுற்றார். அவருடன் காரில் பயணம் செய்த அவரின் நண்பர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ரொம்பின், முவாட்ஸாம் ஷா, கம்போங் காடாக் அருகில் ஜாலான் குவாந்தான்- செகமாட் சாலையின் 108 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் 28 வயது முகமட் ஹெல்மி மெசோவீர் சோஃபேட் என்பவர் கடும் காயங்களுக்கு ஆளாகி, முவாட்ஸாம் ஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அவரின் 38 வயது நண்பர் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரிஃப் ஷாய் ஷாரிஃப் மொண்டோய் தெரிவித்தார்.








