Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சந்தேகப் பேர்வழி, மாணவியின் ஏடிஎம் கார்ட்டைப் பயன்படுத்தியுள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சந்தேகப் பேர்வழி, மாணவியின் ஏடிஎம் கார்ட்டைப் பயன்படுத்தியுள்ளார்

சிப்பாங், ஜூன்.26-

சைபர்ஜெயா பல்பல்கலைக்கழக மாணவியின் படுகொலைக்குக் காரணமானவர் என்று நம்பப்படும் சந்தேக் பேர்வழி, அந்த மாணவியின் ஏடிஎம் கார்ட்டைப் பயன்படுத்தி பணத்தை மீட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவியின் ஏடிஎம் கார்ட்டைப் பயன்படுத்தி, ஐந்து முதல் ஆறு முறை பணம் மீட்கப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

அந்த மாணவி கொலை செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே அவரின் ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டு, பணம் மீட்கப்பட்டுள்ளது.

அந்தச் சந்தேகப் பேர்வழி எந்த வங்கியில் அல்லது ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்ட இடத்தில் பணத்தை மீட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் மூலம் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியைக் கண்டுபிடிக்க முடியும் என்று போலீஸ் நம்புகிறது. அவரை அடையாளம் காணவும், அவரைத் தேடவும் போலீசார் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளதாக ஏசிபி நோர்ஹிஸாம் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →