ஜர்ஜ்டவுன், நவம்பர்.17-
பினாங்கு, லோரோங் புக்கிட் ஜுருவிலுள்ள தாய்லாந்து உணவகம் ஒன்றில் நேற்று இரவு, உணவில் சுவை குறைவாக இருந்ததற்காக எழுந்த தகராறில், மியன்மார் நாட்டைச் சேர்ந்த பெண் சமையல்காரர் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்டார்.
மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் வாடிக்கையாளர் ஒருவர், அந்த பெண் சமையல்காரர் மற்றும் அவரது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தேக நபர் தனது சகோதரரை அழைந்து வந்து கணவன் மனைவி இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பெண் சமையல்காரர் உயிரிழந்த நிலையில், அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பினாங்கு போலீஸ் தலைவர் அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.








