லஞ்ச ஊழல் தொடர்பில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் முஹமாட் அட்லான் பெர்ஹான்னை கடந்த ஜுன் மாதத்திலிருந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தேடி வருகிறது என்று அதன் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார். முகைதீனின் மருமகன் அட்லான் பெர்ஹான் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்பட்டாலும் அவருடன் தொடர்பு கொள்வதற்கு கடந்த ஜுன் மாதத்திலிருந்து எஸ்பிஆர்எம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார். முன்னதாக, லஞ்ச ஊழல் தொடர்பில் அழைத்து பேச எஸ்பிஆர்எம் அதிகாரிகள் முயற்சித்த போது ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, தட்டிக்கழித்து வந்த அட்லான் பெர்ஹான், இறுதியில் அவரை அறவே தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


