கிள்ளான் நகராண்மைக்கழகமான எம்.பி.கே, தனது வியூக சகாவான கிள்ளான் மொத்த வியாபார மையம் ஜி.எம் கிள்ளான் குடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை “வாகனமற்ற கிள்ளான் தினம்” மாதத்தை கொண்டாடும் வகையில் மக்கள் பங்கு கொள்ளும் பலதரப்பட்ட நடவடிக்கைகளை வண்ணக் கலவையாக குதூகலத்துடன் ஏற்பாடு செய்தது.
இதில் பங்கு கொண்டவர்கள் பாத்தேக் ஆடைகளை அணிந்து நிகழ்விற்கு மெருகூட்டும் அதேவேளையில் பங்கேற்பாளர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணமான ஃபுன் வாக்F உட்பட கிள்ளான் நகரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.
இந்த நடைப்பயணத்தின் போது, பங்கேற்பாளர்கள், வரலாற்று நகரான கிள்ளானில் தாங்கள் பார்க்கும் பாரம்பரிய கட்டங்களை புகைப்படங்ள் எடுத்தல், குப்பைகள் மற்றும் மறுசுழற்சிக்கான பொருட்களை சேகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டதாக ஜிஎம் கிள்ளான் மொத்த வியாபார மையத்தின் முத்திரை தொடர்புத்துறை முதிர் நிலை நிர்வாகி நோர்சுவைடா ஒத்மான் தெரிவித்தார்.
கிள்ளான் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் கடப்பாட்டு உணர்வுடன் கிள்ளான் நகராண்மைக்கழகத்துடன் இணைந்து ஜிஎம்.கிள்ளான் இந்நிகழ்விற்கு ஆதரவு கரம் நீட்டியதாக நோர்சுவைடா ஒத்மான் குறிப்பிட்டார்.
பலதரப்பட்ட மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றது மூலம் அதிகளவில் குப்பைகளை சேகரித்தவர்கள், சிறந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியோருக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் நோர்சுவைடா ஒத்மான் தெரிவித்தார்.
கிள்ளான் நகராண்மைக்கழகத்தின் தலைவர் நோரைனி ரோஸ்லான் கூறுகையில் அடுத்த ஆண்டு கிள்ளான் நகராண்மைக்கழகம், மாநகர் அந்தஸ்திற்கு உயரவிருப்பதால் ஓரிட மக்கள் கிள்ளான் நகரை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஜிஎம் கிள்ளான் குடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
தவிர இந்நிகழ்வில் பாத்தேக் மற்றும் கிராமப்புறங்களில் அணியும் ஆடைகளை பிரபலப்படுத்தும் வகையில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் திரளாக வலம் வந்து நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர் என்று நோரைனி ரோஸ்லான் தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


