ஜோகூர் பாரு, டிசம்பர்.17-
ஆடவர் ஒருவர் ஹோட்டல் ஒன்றின் உயர்ந்த கட்டடத்திலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் ஜோகூர் பாரு, ஜாலான் டத்தோ சுலைமானில் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ந்தது.
கடுமையான காயங்களுக்கு ஆளான 50 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
அந்த ஆடவரின் மரணத்தில் குற்றத்தன்மைக்கான அம்சங்கள் கண்டறிப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.








