Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் பச்சிளம் குழந்தையின் இரத்தத்தில் போதைப்பொருள் – பரிசோதனையில் உறுதி
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் பச்சிளம் குழந்தையின் இரத்தத்தில் போதைப்பொருள் – பரிசோதனையில் உறுதி

Share:

கிளந்தான் மாநிலத்தில், பச்சிளம் பெண் குழந்தை ஒன்றிற்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் ஆம்பெட்டமைன்கள், பென்சோடயாசபின்கள் என்ற போதைப்பொருளானது அதன் இரத்தத்தில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்குழந்தையின் மன மற்றும் உடல் வளர்ச்சியை சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சிகிச்சைக்குப் பிறகு ஃபின்னிகன் மதிப்பீடு எனப்படும் பரிசோதனையில் குழந்தையின் மதிப்பெண் பூஜ்ஜியமாகியுள்ளது.

தாய் உட்கொண்ட அமைதிப்படுத்தும் மருந்துகளால் குழந்தைக்கு தற்காலிக மருந்து விலகல் அறிகுறிகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ராஜா பெரும்புவான் ஜைனப் இரண்டு மருத்துவமனையில் பிறந்த அக்குழந்தைக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தையின் 30 வயது தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகள் சட்டம் 2001 மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி