Sep 6, 2026
Thisaigal NewsYouTube
6 ஜோகூர் மாணவர்களுக்கு உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு - துங்கு இஸ்மாயிலின் ஆதரவுக்கு பாராட்டு
தற்போதைய செய்திகள்

6 ஜோகூர் மாணவர்களுக்கு உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு - துங்கு இஸ்மாயிலின் ஆதரவுக்கு பாராட்டு

Share:

ஜோகூர் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை முன்னிறுத்தி, அம்மாநிலத்தின் பட்டத்து இளவரசரும், இடைக்கால சுல்தானுமாகிய துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் அக்கறை பாராட்டப்பட்டுள்ளது.

அவரது முயற்சியின் கீழ் பியாசிஸ்வா ஓராங் மூடா ஜோகூர், கோஹோர்ட் 2 கல்வி உதவித்தொகை மூலம் ஜோகூரைச் சேர்ந்த 6 மாணவர்கள், உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

ஏ-லெவெல் தேர்வில் சிறப்பான முடிவுகளைப் பெற்ற இந்த மாணவர்கள் லண்டன் பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் Pennsylvania பல்கலைக்கழகம் ஆகிய உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உள்ளிட்ட துறைகளில் ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு, வேதியியல், உயிர் வேதியியல், கணினி அறிவியல் பயில உள்ளனர்.

ஜோகூர் இளைஞர்களுக்கு தரமான கல்வி வாய்ப்புகளை உருவாக்கி, எதிர்காலத்தில் அவர்கள் பெற்ற அறிவையும் நிபுணத்துவத்தையும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்கான பாதையை உருவாக்குவதில் துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயிலின் கல்வி மீதான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து