Sep 7, 2026
Thisaigal NewsYouTube
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் – அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் – அன்வார் அறிவிப்பு

Share:

நாடாளுமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த நிதி மக்களை நேரடியாகச் சென்றடையும் என்றும், குறிப்பாக வறுமை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளுக்கு அந்த நிதியானது பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள், கிராமங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதை பிரதமரான தம்மால் அனுமதிக்க முடியாது என்றும், ஏழை மக்களுக்கு உதவுவதே தமது பொறுப்பு என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், மக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் ஒரு போதும் குறைக்கப்படவில்லை என்றும் மலாக்காவில் இன்று நடைபெற்ற தேசிய மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து