Sep 7, 2026
Thisaigal NewsYouTube
ஜாலூர் கெமிலாங் குறித்து மலேசியர்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு - தொடர்புத் துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

ஜாலூர் கெமிலாங் குறித்து மலேசியர்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு - தொடர்புத் துறை அமைச்சர் தகவல்

Share:

தேசிய கொடியின் கோடுகளின் எண்ணிக்கை, வண்ணங்களின் வரிசை உள்ளிட்ட அதன் வடிவமைப்பு குறித்து மலேசியர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபஹ்மி ஃபாடில் தெரிவித்துள்ளார்.

தேசிய தின மாதக் கொண்டாட்டங்களின் போது தேசியக் கொடியை மதித்து பயன்படுத்துவது குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், பத்து புரூக், திரங்கானு பகுதியில் முழுமையற்ற ஜாலூர் கெமிலாங் காட்சிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் விசாரணையில் இருப்பதால், அது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஃபஹ்மி தெரிவித்துள்ளார்.

வாகனங்களில் கொடிகளை பொருத்துவதற்குப் பதிலாக, பெயின்ட் சேதமடைவதைத் தவிர்க்க காந்தங்கள் பொருத்திய ஜாலூர் கெமிலாங் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இந்த மாதம் தேசிய தினம் மற்றும் அடுத்த மாதம் மலேசிய தினத்திற்கான கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, சுதந்திர தினத்திற்கு முந்தைய இரவு மெர்டெக்கா மைதானம் மற்றும் டத்தாரான் மெர்டெக்கா ஆகிய இடங்களில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து