Sep 7, 2026
Thisaigal NewsYouTube
பெந்தோங்கில் இந்து ஆலய சிலை உடைப்பு: உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி
தற்போதைய செய்திகள்

பெந்தோங்கில் இந்து ஆலய சிலை உடைப்பு: உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

Share:

பெந்தோங், புக்கிட் திங்கியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சிலை சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சேதமடைந்த சிலையின் புகைப்படங்கள் நேற்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, போலீசாரின் கவனத்திற்கு இந்த விவகாரம் வந்ததாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் காஹார் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுவரை எந்தவொரு போலீஸ் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை பெந்தோங் போலீஸ் தலைமையகம் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பவோ, ஊகங்களை வெளியிடவோ வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக சமய விவகாரங்களை உள்ளடக்கிய தகவல்கள் பதற்றத்தை ஏற்படுத்தாமல் பொறுப்புடன் செயல்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, சம்பவம் குறித்து மலேசிய இந்து சங்கம் விசாரணை நடத்தி வருகின்றது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து