Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ்காரருக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

மனைவியை கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ்காரருக்கு 4,500 ரிங்கிட் அபராதம்

Share:

மனைவியைக் கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ் அதிகாரியான முஹமட் சிருல் அக்மால் ரசாலிக்கு தும்பாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 4,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி வாகாஃப் பாரு, கம்போங் செமாட் ஜால் பகுதியில் வீட்டில் ஆவேசமாக நடந்து கொண்ட அவர், மனைவியைக் கொலை செய்வதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த மிரட்டலை மனைவியின் தாயும், குழந்தையும் பார்த்த நிலையில், அச்சமடைந்த மனைவி போலீசாரைத் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

தனது மனைவியின் தாயார், திருமண வாழ்க்கையில் அடிக்கடி தலையிடுவதாக அவர் கொண்டிருந்த அதிருப்தியே சம்பவத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அபராதத்தை செலுத்தத் தவறினால் 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி