Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முன்னாள் போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

Share:

மலாக்கா, தாமான் பூகீட் செங் வீடமைப்புப் பகுதியில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 7 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

35 வயதுடைய அந்த முன்னாள் போலீஸ்காரர் மலாக்கா, ஆயர் குரோ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக மலாக்கா தெங்கா போலீஸ் தலைவர் எசிபி கிரிஸ்தோப்பர் பதீட் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், 25 வயதுடைய காய்க்கறி வியாபாரியைப் பாராங்முனையில் மடக்கி ரொக்கப் பணத்தைக் கொள்ளையிட்டது தொடர்பில், அந்த முன்னாள் போலீஸ்காரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எசிபி கிரிஸ்தோப்பர் குறிப்பிட்டார்.

Related News