ஈப்போ, ஜூலை.13-
மலேசியத் தரைப்படை, அமெரிக்கத் தரைப்படை, ஆஸ்திரேலியத் தரைப்படை இணைந்து "கெரிஸ் ஸ்டிரைக் 2025" என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை ஜூலை 17 முதல் 30 வரை நடத்தவுள்ளன. இப்பயிற்சி ஈப்போ, சுங்கை சிப்புட், கோல கங்சார் முதல் லெங்கோங் வரையிலான பேரா மாநிலப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு இராணுவ வீரர்கள், இராணுவ வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்டு பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மலேசிய தரைப்படையின் மக்கள் தொடர்புப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெறுவதுடன், நட்பு நாடுகளுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதையும், வட்டாரப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தரைப்படையின் தயார் நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








