கோலாலம்பூர், செப்டம்பர்.12-
தேசிய தினக் கொண்டாட்ட மாதத்தில் மட்டுமின்றி, நாட்டின் அடையாளத்தின் பெருமை கொள்ளு வகையில் எல்லா நேரங்களிலும் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு மலேசியர்களைத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கேட்டுக் கொண்டார்.
மலேசியர்கள் நாட்டின் மீது தங்களின் விசுவாசத்தையும், தேசப்பற்றையும் வெளிப்படுத்த ஜாலூர் கெமிலாங் கொடியைப் பறக்க விடுவது அவசியமானதாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேசியக் கொடியைப் பறக்க விடும் கலாச்சாரம் என்பது தேசிய தினக் கொண்டாட்ட மாதம் மற்றும் மலேசிய தின மாதத்துடன் நின்று விடக்கூடாது. ஒவ்வொரு குடிமகனின் ஆன்மாவிலும் தேசப்பற்று இரண்டறக் கலந்திருப்பதற்கு ஜாலூர் கெமிலாங் கொடியைப் பறக்கவிடும் மாண்பையும் கொண்டிருக்க வேண்டும் என்று டத்தோ ஃபாமி வலியுறுத்தினார்.








