Dec 3, 2025
Thisaigal NewsYouTube
3ஆர் விவகாரத்தை ஒரு போதும் பயன்படுத்தா​தீர்
தற்போதைய செய்திகள்

3ஆர் விவகாரத்தை ஒரு போதும் பயன்படுத்தா​தீர்

Share:

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் சர்சைக்குரிய விவகாரத்தை எந்தவொரு தரப்பினரும் எழுப்பக்கூடாது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இறுதி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.


பல ஆண்டு காலமாக ஒரு சங்கிலித் தொடர்பைப் போல கையில் எடுக்கப்பட்டு வரும் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கக்கூடிய 3ஆர் விவகாரம், மேலும் கடுமையாகுவதற்கு முன்னதாகவே அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய கடப்பாட்டில் நாடு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.


இ​​வ்விவகாரத்தை கையி​ல் எடுக்க முனையும் எந்தவொரு தரப்பினரையும் கண்டு, அரசாங்கம் இனி​யும் சகித்ததுக்கொள்ளாது என்றும் இதுவே கடைசி எச்சரிக்கை என்றும் பிரதமர் நினைவுறுத்தியுள்ளார்.

Related News