Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவருக்கு அறுவை சிகிச்சை: தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவருக்கு அறுவை சிகிச்சை: தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்

Share:

ஜோகூர் மாநில பெர்சாத்து கிளையின் முன்னாள் தலைவர் டான் லெக் காங் தவறுதலாகத் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் காயமடைந்தார்.

இச்சம்பவத்தில் அவர் மார்புப் பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அவருக்கு சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கோத்தா திங்கி பகுதியில் உள்ள துப்பாக்கி பயிற்சி மையத்தில் பிற்பகல் 3 மணியளவில் நடந்த இச்சம்பவத்தையடுத்து, மாலை 5.30 மணியளவில் அவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘

பயிற்சியின் போது ஆயுதத்தில் மீதமிருந்த குண்டு இருப்பதை கவனிக்காமல் சுட்டுவிட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News