May 22, 2026
Thisaigal NewsYouTube
SPM தேர்வை அகற்றுவதை விட, மேம்படுத்த வேண்டும்! - PAGE அமைப்பு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

SPM தேர்வை அகற்றுவதை விட, மேம்படுத்த வேண்டும்! - PAGE அமைப்பு கோரிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20-

SPM பொதுத்தேர்வின் தரம் மேம்படுத்தப்பட வேண்டுமே தவிர, அதனை அகற்றுவது சிறந்த நடவடிக்கையாக இருக்காது என PAGE எனப்படும் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை பணிக்குழுவின் தலைவர் நூர் அசிமா அப்துல் ரஹீம் வலியுறுத்தினார்.

அண்மையில் வெளியாகியிருந்த SPM தேர்வு முடிவை பார்க்கையில், அத்தேர்வை எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, SPM தேர்வை மாணவர்கள் நேர விரயமாக கருதுவதை காண முடிகின்றது என்றாரவர்.

நடப்பில், SPM தேர்வை, உயர்நிலை சிந்தனை திறனுடன் அணுகுவதைக் காட்டிலும், மாணவர்கள் மனனம் செய்து, அத்தேர்வை எழுதுவதில் முக்கியத்துவம் வழங்கும் வகையில் உள்ளது.

ஆகையால், அமாலி எனப்படும் நடைமுறை பாடங்களை அதிகம் கொண்ட பாடத்திட்டங்களை உட்படுத்தி அத்தேர்வில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

பொதுத்தேர்வுகள், மாணவர்களின் கல்வி ஆற்றலை மதிப்பீடு செய்வதோடு, அவர்கள் வேலை செய்வதற்கான பயிற்சிகளையும் வழங்கும் வகையில் இருக்க வேண்டும்.

வேலைகளைத் தேடும்போது, அது மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்கும் என நூர் அசிமா வலியுறுத்தினார்.

Related News