Jan 5, 2026
Thisaigal NewsYouTube
1.37 பில்லியன் ரிங்கிட் மோசடி! - போலி முதலீட்டு வலையில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள்!
தற்போதைய செய்திகள்

1.37 பில்லியன் ரிங்கிட் மோசடி! - போலி முதலீட்டு வலையில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள்!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.04-

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9 ஆயிரத்து 296 மலேசியர்கள் போலி முதலீட்டுத் திட்டங்களில் சிக்கி, ஒட்டு மொத்தமாக 1.37 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பணத்தைப் பறிகொடுத்துள்ளதாகப் படு அதிர்ச்சியான புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. குறிப்பாக 31 முதல் 40 வயதுக்குட்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர் தான் இந்த மோசடிக் கும்பல்களின் முதன்மை இலக்காக மாறி, தங்களின் கடின உழைப்பின் பலனைப் பலிகொடுத்து வருவதாக வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.

"குறைந்த முதலீடு - கொள்ளை ஆதாயம்" என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி, செல்வாக்கு மிக்க நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் இந்த இணையக் கொள்ளையர்கள், மிக நுணுக்கமான முறையில் வலை விரிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்கள் சிரமப்பட்டுச் சேர்த்த பணம் மாயமாகாமல் இருக்க, எந்தவொரு முதலீட்டிற்கு முன்பும் வங்கி, பங்குச் சந்தை ஆணையத்திடம் அதன் உண்மைத்தன்மையைச் சரி பார்க்குமாறு காவற்படையினர் பொதுமக்களுக்குக் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related News