நாட்டில் மணவிலக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2021 இல் 43 ஆயிரத்து 936 மணவிலக்கு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை கடந்த 2022இல் 62 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது என மலேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
38 வயதுக்கும் குறைவான இளம் ஜோடிகளே அதிக மணவிலக்கு செய்திருப்பதாகவும் அத்துறையின் புள்ளி விவரம் காட்டுகிறது.
ஆண்களில் 30 முதல் 34 வயது கொண்டவர்கள் 9 ஆயிரத்து 196 பேரும் , 35 முதல் 39 வயதுடையவர்களில் 8 ஆயிரத்து 894 பேரும் 25 முதல் 29 வயதினரில் 6 ஆயிரத்து 757 பேரும் மணவிலக்கு செய்து கொண்டார்கள்.
பெண்களில் 30 முதல் 34 வயது கொண்டவர்கள் 9 ஆயிரத்து 631 பேரும் , 35 முதல் 39 வயதுடையவர்களில் 8 ஆயிரத்து 676 பேரும் 25 முதல் 29 வயதினரில் 8 ஆயிரத்து 713 பேரும் மணவிலக்கு செய்து கொண்டார்கள் என மலேசியப் புளி விவரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.








