Oct 10, 2026
Thisaigal NewsYouTube

எஸ்எஸ்டி குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்கும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்எஸ்டி குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்கும்

இஸ்கண்டார் புத்ரி, ஜூன்.20-

எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியை அடுத்த மாதம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக அது குறித்து மக்களுக்கு அரசாங்கம் விளக்கம் அளிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எஸ்எஸ்டி குறித்து மக்களுக்கு எந்தவொரு குழப்பமும், சந்தேகமும் இல்லாமல் இருப்பதை எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யும் பொருட்டு இந்த விளக்கமளிப்புக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யும் என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

அரசாங்கம் அறிவித்துள்ள எஸ்எஸ்டி வரி விதிப்பு, வரும் ஜுலை முதல் தேதி அமல்படுத்தப்படவிருக்கிறது. இந்த வரியானது குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் 5 முதல் 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →