May 24, 2026
Thisaigal NewsYouTube
மீட்பு நடவடிக்கை நிறைவு பெறும் வரையில் வர்த்தகத் தலத்தை மூடுவீர்
தற்போதைய செய்திகள்

மீட்பு நடவடிக்கை நிறைவு பெறும் வரையில் வர்த்தகத் தலத்தை மூடுவீர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-

கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் நடைப்பாதை குழியில் விழுந்து காணாமல் போன ஓர் இந்திய மாதுவான விஜயலெட்சுமியை தேடி கண்டு பிடிக்கும் வரையில் அந்த முன்னணி வர்த்தகத் தளத்தில் வியாபாரம் நடத்தி வரும் கடை உரிமையாளர்கள், தங்கள் வர்த்தகப்பகுதியை தற்காலிகமாக மூடும்படி போலீசார் இன்று அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பகுதியில் அந்த இந்திய மாதுவை மீட்கும் முயற்சியாக பாதாள சாக்கடைகளின் பிரதான கான்கிரேட் இரும்பு சிலாப்புகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அதிலிருந்து வெளியேறக்கூடிய நச்சு வாயு மிகுந்த ஆபத்தனதாகும். அருகில் உள்ளவர்களை எளிதில் தாக்கக்கூடும்.

எனவே அதனை தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வர்த்தகத்தளத்தை மூடும்படி டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுல்ஸ்மி அஃபெண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News