Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விவாகரத்து கோரிய மனைவியைக் கொலை செய்த ஆடவர் 7 நாள்கள் தடுப்புக்காவலிடப்பட்டார்
தற்போதைய செய்திகள்

விவாகரத்து கோரிய மனைவியைக் கொலை செய்த ஆடவர் 7 நாள்கள் தடுப்புக்காவலிடப்பட்டார்

Share:

பேராக், பத்து காஜா-வில் விவாகரத்து கோரிய 32 வயதுடைய மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர் இன்று தொடங்கி 7 நாள்களுக்கு விசாரணைக்காக தடுப்புக்காவலிடப்பட்டார்.

36 வயதுடைய அவ்வாடவரை தடுப்புக்காவலில் வைப்பதற்கான அனுமதியை பத்து காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் அஸ்லின் ஜெட்டி ஜைனல் அபிடின் வழங்கினார்.

வேலையற்ற அவ்வாடவர், ஜாலான் பெஜாபாட் போஸ்-சிலுள்ள ஒரு தங்கும்விடுதியில் அவரது மனைவியை கொலை செய்த பிறகு நேற்று மாலை மணி 2 அளவில், போலீஸ் நிலையம் ஒன்றில் சரணடைந்ததாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சம்பந்தப்பட்ட தங்குவிடுதியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலத்தை மீட்ட போலீஸ், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியையும் கண்டெடுத்ததாக, அச்செய்தியில் கூறப்பட்டிருந்தன.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்