May 22, 2026
Thisaigal NewsYouTube
பட்டர்வொர்த்தில் தடுப்பூசித் திட்டம்
தற்போதைய செய்திகள்

பட்டர்வொர்த்தில் தடுப்பூசித் திட்டம்

Share:

பினாங்கு, ஜூன் 04-

பினாங்கு, பகான் நாடாளுமன்ற சேவை மையம் மற்றும் அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று சட்டமன்றத்தொகுதிகளான சுங்கை புயு, பகான் ஜெர்மல் மற்றும் பகான் டாலாம் ஆகியவற்றின் சேவை மையங்கள் ஒருங்கிணைந்து HPV தடுப்பூசித் திட்டம், இலவச சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் புற்றுநோய் தடுப்பிற்கான இலவச மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றை நடத்தவிருகின்றன.

மலேசிய தேசிய புற்றுநோய் தடுப்பு சங்கத்துடன் இணைந்து வரும் ஜுன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தினங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் பட்டர்வொர்த், டேவான் டத்தோ ஹாஜி அகமது படாவி மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய HPV தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக 13 வயது பெண் பிள்ளைகளுக்கு மலேசிய அரசாங்கம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தடுப்பூசி வழங்கி வந்தது. கோவிட் 19 நோய்த் தொற்று பரவலுக்கு பிறகு அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் புற்றுநோய் தடுப்பிற்கான HPV தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ளாத பேறுகுறைந்த மற்றும் வசதி குறைந்த பெண்களுக்கு மலேசிய தேசிய புற்றுநோய் தடுப்பு சங்கத்தின் ஒத்துழைப்புடன் பினாங்கில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கபட்டுள்ளதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் பகான் நாடாளுமன்றத் தொகுதியில் 13 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்போகாத மாற்றுத் திறனாளிகள், கடும் நோய்க்கு ஆளாகியவர்கள் ஆகியோருக்கு மருத்துவர்களின் ஆலோசனையுடன் HPV தடுப்புப்பூசியை செலுத்திக்கொள்ளும் சேவை வழங்கப்படும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

1600 DOS என்ற இந்த தடுப்பூசியின் மதிப்பு 500 வெள்ளியாகும். தவிர 200 வெள்ளி மதி ப்பில் புற்றுநோய்த் தடுப்பிற்கான இலவச பரிசோதனையையும் செய்து கொள்ளலாம் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவிருக்கின்ற பெண்கள் தத்தம் தொகுதிகளில் பதிவு செய்து கொள்ளுமாறு டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பகான் நாடாளுன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் மற்றும் இதர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related News