Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதில் அரசு உறுதி பூண்டுள்ளது என்று சிம் கூறுகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதில் அரசு உறுதி பூண்டுள்ளது என்று சிம் கூறுகிறார்

புத்ராஜெயா, ஜூன்.17-

நியாயமான ஊதியம், பாதுகாப்பான பணித் தன்மைகள் மற்றும் மேம்பட்ட திறன்களுக்கான அதிக அணுகலை வழங்குவதன் மூலம் மலேசிய தொழிலாளர்களின் கெளரவத்தை மீட்டெடுக்க அரசாங்கம் தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

குறைந்த ஊதிய பொருளாதாரத் தோற்றத்திலிருந்து மலேசியா விலகி, உள்ளூர் திறமையாளர்களுக்கு சிறந்த ஊதியம் தரும் வேலைகளை வழங்கக்கூடிய உயர் மதிப்புள்ள தொழில்களை ஈர்க்க வேண்டும் என்று சிம் குறிப்பிட்டார்.

இழக்கப்பட்ட நேரம், இழந்த வாய்ப்புகள் மற்றும் தவறவிட்ட முன்னேற்றத்தைப் பிடிப்பதற்கு மனித வள அமைச்சு உறுதி பூண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உண்மையில், மனிதவளத்திற்குப் பொறுப்பான அமைச்சராகத் தாம் நியமிக்கப்பட்டபோது, இரவில் தம்மை விழித்திருக்க வைக்கும் விஷயங்களில் ஒன்று தொழிலாளர்களின் ஊதியமாகும் என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

மலேசியத் தொழிலாளர்கள் தங்கள் வேலையின் மதிப்பை உண்மையிலேயே பிரதிபலிக்கும் ஊதியத்தைப் பெற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஆனால், ஊதியங்கள் என்பது முதலாளிகளின் தாராள மனப்பான்மை அல்லது தொழிலாளர்களின் திறன்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை என்பதையும் தாம் ஒப்புக் கொள்வதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

ஊதியங்கள் பெரும்பாலும் முதலாளிகளின் பொறுப்பாகவோ அல்லது தொழிலாளர்களின் திறனுடன் பிணைக்கப்பட்டதாகவோ பார்க்கப்பட்டாலும், ஆழமான சவால் என்பது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார கட்டமைப்பில் உள்ளது என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயா, ஸெனித் ஹோட்டலில் P10X அகாடமி திறப்பு விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →